Categories
உலக செய்திகள்

‘நிஜமாகவே பிரச்சனை உள்ளது’…. தலீபான்களுக்கு உதவும் சீனா…. கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன்….!!

வெள்ளைமாளிகையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனை தொடர்ந்து தலீபான்கள் தற்பொழுது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அவர்களுக்கு முதலாவதாக தங்களது ஆதரவை தெரிவித்தது சீனா ஆகும். இதே போன்று தலீபான்களும் சீனாவை தங்களது மிக முக்கிய நட்பு நாடு என்று உறவு பாராட்டி வந்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் “சீனா தலீபான்களுக்கு நிதி உதவி செய்வதால் அமெரிக்காவின் நலனுக்கு ஏதேனும் கேடு விளையுமா” என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கூறியதாவது “தலீபான்களிடம் சீனாவுக்கு நிஜமாகவே சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டி சீனா அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை தவிர்த்து பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் போன்ற அண்டை நாடுகளும் தலீபான்களுடன் இணைந்து செயல்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது என்றும் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Categories

Tech |