Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதத்தில் எரிச்சல் ஏன் உண்டாகிறது..? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது..!!

பாதத்தில் எரிச்சல் உண்டாக காரணம் என்ன..? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது:

“வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் பிரச்னை இருக்கும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

* வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் ஏற்படலாம். குறிப்பாக, பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். வைட்டமின் பி 12, அசைவ உணவுகளில் அதிகம் இருக்கும். அசைவத்தைத் தவிர்ப்பதோடு, வைட்டமின் 12 நிறைந்த சைவ உணவுகளையும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்குப் பாத எரிச்சல் ஏற்படலாம்.

* உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், அல்சர் பிரச்னை இருப்பவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், வயிற்றுப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதில் சில நாள்கள் சிக்கல் இருக்கும். அதனாலும் கூட பாத எரிச்சல் ஏற்படும்.

* சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், அதன் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் உடலில் உள்ள நீரைச் சுத்திகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படலாம். இது `யுரேமிக் நியூரோபதி’ எனப்படும்.

* ஆர்த்ரைட்டிஸ், தொற்றுப் பிரச்னைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதால் பாத எரிச்சல் ஏற்படலாம்.சில நேரங்களில், சிகிச்சையின் பக்கவிளைவாகக் கூட பாத எரிச்சல் ஏற்படலாம். உதாரணமாகப் புற்றுநோய் சிகிச்சையில் அளிக்கப்படும்

* நாம் உண்ணும் சில உணவுகள் மூலம் ஈயம், ஆர்செனிக், பாதரசம் போன்ற ரசாயனங்கள் உடலில் சேர வாய்ப்புள்ளது. இவை, ஊட்டச்சத்துகளைக் கிரகிக்கும் உடலின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். சமையல் பாத்திரங்கள், பரிமாறும் பாத்திரங்களை நன்கு சுத்தப்படுத்தி பரிமாறுவதன்மூலம் இந்த ரசாயனங்கள் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம். ஈயம், தாமிரப் பாத்திரங்களில் நீண்டநேரம் உணவை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* உடலில் தைராய்டு ஹார்மோனின் சுரப்பு அதிகரித்து நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும். அபோது பாதத்தில் எரிச்சல் அதிகம் ஏற்படும். ‘ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு பாதத்தில் எரிச்சல் அதிகம் உண்டாகும். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். அபூதுதான் இதை தவிர்க்க முடியும்.

* வீட்டில் உள்ள தரைகளை சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தபடும் டிடெர்ஜென்ட், சோப் ஆகியவை காலில் நேரடியாகப் பட்டால் அதில் இருக்கும் ரசாயனங்களால் காலில் ஒவ்வாமை ஏற்பட்டு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.

அவ்வாறு உண்டாக கூடிய பட்சத்தில் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். பாதத்தில் எரிச்சல் ஏற்படுவதில், நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

Categories

Tech |