கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர்கள் திரு. எஸ். பி.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமானது அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகர் திரு. எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு மிகச்சிறிய அளவிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் இது குறித்து கவலையடைய வேண்டாம் என்றும், விரைவில் தான் குணமாகிவிடுவேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ். பி. பியின் உடல் நிலை மோசமானதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.