Categories
தேசிய செய்திகள்

பசுவை தொட்டு கும்பிட சென்ற எம்பிக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார்.

எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை பின்னங்காலால் உதைத்து, விரட்டி இருக்கிறது. இதனால் அதிர்ந்துபோன அவர் சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் பசுவை நெருங்கி உள்ளார். அப்போது அதன் உரிமையாளரும் பசுவை பிடித்துக்கொண்டார். இருப்பினும் மறுபடியும் பசு அவரை நோக்கி, பின்னங்காலால் உதைத்துள்ளது. இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த எம்பி பிறகு அந்த இடத்திலிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |