வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியே வந்தால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் வெளியே சுற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்திருந்தார்.அதன் ஒரு பகுதியாக அதீத நடவடிக்கையாக அவர்களின் பாஸ்போர்ட் முடக்குவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக முதல்வர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர் , கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இப்படியான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.