Categories
தேசிய செய்திகள்

பாஸ்போர்ட் வேணும்னா… “பேஸ்புக்ல சூதானமா இருக்கணும்”… அரசு அறிவிப்பு..!!

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக செயல்பாடுகளை ஆராய்வதற்கு உத்தரகாண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்று உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்வார்கள். உத்தரகாண்ட் காவல்துறை டிஜிபி அசோக்குமார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க விண்ணப்பதாரரின் சமூக உள்ளடக்களை ஆராயப்பட வேண்டும் என கூறியுள்ளார் .

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் எவருக்கும் பாஸ்போர்ட் தரக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே உள்ள விதிமுறைக்கு ஆதரவாக இதைப் பற்றி பேசி இருப்பதாக தெரிவித்தார். பயனாளர்கள் சமூக ஊடகங்களில் அதிக பொறுப்புடன் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |