Categories
உலக செய்திகள்

என்ன..! தடுப்பூசி பாஸ்போர்ட்டா…. இத போட்டவர்களுக்கு முன்னுரிமை…. புதிய முடிவெடுத்த ஜப்பான்….!!

வெளிநாடு செல்ல விரும்பும் பயணிகளில், தேவைப்படுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான பாஸ்போர்ட்டை வழங்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதற்கிடையே கொரோனா மிக வேகமாக பரவுவதால், சர்வதேச அளவிலான விமான சேவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலே காணப்பட்டுள்ளது.

அதிலும் சில நாடுகள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ்களுடன் தான் நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து பல நாடுகள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தொடங்கியுள்ளது.

இதனை முன்னிட்டு ஜப்பான் அரசாங்கம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ஜப்பானிலிருந்து வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் பயணிகளில், தேவைபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான பாஸ்போர்ட்டை வழங்க முடிவு செய்துள்ளது.

Categories

Tech |