பிரேசிலில் விமான பணிப்பெண் விமானத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் வெடித்துச் சிதற வாய்ப்பிருப்பதாகக் கூறியவுடன் அனைத்து பயணிகளும் அவசர வழி மூலம் இறங்கியிருக்கிறார்கள்.
பிரேசில் நாட்டில் இருக்கும் Cuiabá என்னும் நகரின் சர்வதேச விமான நிலையமான Marechal Rondon-லிருந்து, The Azul Brazilian Airlines நிறுவனத்திற்குரிய விமானத்தில், 132 பயணிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் Sao Paolo-விற்கு பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில் விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், விமான பணிப்பெண், “விமானம் வெடித்து சிதறப் போகிறது, அனைவரும் உடனடியாக வெளியேறி விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ந்து போன பயணிகள் அவசர வழியின் மூலமாக வெளியேறினர். அப்போது 9 பயணிகள் காயமடைந்தனர். இது தொடர்பில் பயணி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, “விமானம் வெடித்து சிதறப் போகிறது என்ற தெரிவிக்கும்போது, பயணிகளின் எந்த மாதிரியான மனநிலை இருக்கும், ஆனால் நல்ல வேளையாக ஒருவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை, கடவுளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின்பு, அனைத்து பயணிகளையும் வேறு விமானங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில், விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், பயணிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் நாங்கள் அளிக்கிறோம். இந்த நிகழ்விற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.
மின் கசிவு ஏற்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. எனினும், அவசரகால நடவடிக்கைகளை கடைபிடித்து வந்ததாக விமான நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.