Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பசியால் மயங்கி விழுந்தவர்…. காவல் ஆய்வாளரின் மனிதாபிமானம்… குவியும் பாராட்டுக்கள்…!!

பசியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவரை மீட்டு உதவி செய்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆய்வாளர் அசோகன் கூடுவாஞ்சேரி பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தார். அந்த சமயத்தில் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் பசியால் மயங்கிக் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த ஆய்வாளர் அவரை மீட்டு தான் வைத்திருந்த கையுறை, முககவசம், பிஸ்கட்,  உணவு,  தண்ணீர் அனைத்தையும் கொடுத்து அவரை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பினார். இத்தகைய மனிதநேய செயலை செய்த ஆய்வாளர் அசோகனை கண்ட அங்கிருந்த மக்கள் அவரை கைபேசியில் படமெடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். அவர்செய்த மனிதநேய செயலுக்கு பல்வேறு பாராட்டுகள் குவிகின்றன.

Categories

Tech |