Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு பணீந்திர ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமாண பணீந்திர ரெட்டி கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகராட்சி பகுதிகளிலும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குள் குடம் மற்றும் கொளக்குடி  பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மழைக்காலங்களில் வடிகால்களை தூர்வாரி பொதுமக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சரி செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். கொளக்குடி பகுதியில் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை வருவாய் நிர்வாக ஆணையர் இடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பேரிடர் ஏற்பட்டால் பொது மக்களை எவ்வாறு காப்பது என்பது குறித்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடியில் நடைபெற்றது.

தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் மக்களை எப்படி மீட்பது அவர்களுக்கு முதலுதவி எவ்வாறு அளிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் காட்சிகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இயற்கை சீற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த வதற்கான கழிவுகளை எவ்வாறு கையாள்வது குறித்து செயல்விளக்கம் பயிற்சி அளிக்கப்பட்டது.

Categories

Tech |