Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் கரியமில வாயு…. பேரழிவை நோக்கி செல்லும் உலகம்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்….!!

கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கரியமில வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது என்று 153 நாடுகளை சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் பருவநிலை மாற்றம் குறித்து 153 நாடுகள் சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்து குறிப்பாவது, கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொழில் புரட்சி தொடங்கிய காலத்திலிருந்து கரியமில வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மனித இனத்திற்கு மட்டுமில்லாமல் மற்ற இனங்களையும் மிகவும் கடுமையாக பாதிக்கிறது. இதற்கிடையே செயற்கைக்கோள்களின் தரவுகளின் படி அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி வருவதால் கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனையடுத்து பூமியில் நடைபெறும் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கையில் சர்வதேச நாடுகள் ஈடுபடவேண்டும் என்றும், இதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டால் உலகம் பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் இந்தியா 14வது இடத்தில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |