Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபனுக்கு பூங்கொத்துடன் சாக்லேட் அனுப்பிய சிம்பு…. பார்த்திபனின் பதில் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி….!!


நடிகர் சிம்பு மற்றும் பார்த்திபன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நடிகர் சிம்பு, வெங்கட்பிரபு இயக்கி வரும் “மாநாடு” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தை கொரோனா அச்சுறுத்தல் முடிந்து நிலைமை சீரானதும்  இயக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதுவரை பார்த்திபன் – சிம்பு இணைந்து ஒரு படம் கூட நடித்ததில்லை. இருப்பினும் பார்த்திபன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது ” சிம்பு தொடர்பான கேள்விகளுக்கு அவர் ஒரு சுயம்பு” என பாராட்டிப் பேசியுள்ளார்.

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த சிம்பு உடனே பார்த்திபனுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக பூங்கொத்து மற்றும் சாக்லேட்களை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” சுயம்பு சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட, உதவியாளர் பூங்கொத்தும், சாக்லேட்டுடணும் வந்தார். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார். எண்ணப் புத்தகத்தில்…’ எனக்கே ஆச்சரியமாக உள்ளது நாம் இருவரும் சேர்ந்து இன்னும் ஏன் ஒர்க் பண்ண வில்லை’. அதாகப்பட்டது… விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்…!!!”  என தனது டுவிட்டர் பக்கத்தில் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். பார்த்திபனின் இப்பதிவால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.

Categories

Tech |