தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என பார்த்திபன் அவர்கள் கூறியுள்ளார்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் பேசிய பொழுது நான் சினிமாவில் சாதனை புரிந்த பிறகு கண்டிப்பாக அரசியலிலும் சாதனை புரிய புரட்சிகரமாக வருவேன். ஆனால் எப்போது நான் அரசியலுக்கு வருவேன் என்பதை காலம் மட்டும் தான் நிர்ணயிக்கும் என கூறியுள்ளார். மேலும் தான் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு உரிய அங்கீகாரத்தை அரசு கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார் நடிகர் பார்த்திபன்.