Categories
உலக செய்திகள்

சாமர்த்தியமா வந்து இயர்போனை எடுத்து சென்ற கிளி…. நேரலையில் சுவாரஸ்ய சம்பவம்…!!!

சிலி நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இயர்போனை ஒரு கிளி எடுத்துச் சென்ற வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கிறது.

சிலி நாட்டில் பத்திரிக்கையாளரான நிகோலஸ் கிரம் ஒரு சம்பவம் குறித்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நேரலையில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் அருகில் பறந்து வந்த ஒரு கிளி தோளில் அமர்ந்து கொண்டது.

அதன் பிறகு, அவர் காதில் மாட்டி இருந்த இயர்போனை எடுத்துவிட்டு பறந்தது. எனவே, அந்த பத்திரிக்கையாளர் கிளியை தேடிக் கொண்டே செய்திகளை தெரிவித்து கொண்டிருந்தார். நேரலையின் போது நடந்த இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Categories

Tech |