ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிகவும் பிரபலமான சமையல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் 13 ஆவது சீசன் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு போட்டியாக இறுதிச் சுற்றில் வங்காளதேசத்தை சேர்ந்த மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த மாஸ்டர் செஃப் 13 ஆவது சீசன் போட்டியில் 27 வயது மதிக்கத்தக்க ஜஸ்டின் நாராயணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜஸ்டின் நாராயணன் மாஸ்டர் செஃப் 13வது சீசனின் முதல் பரிசை வென்றுள்ளதால் அவருக்கு 1.86 கோடி பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.