அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் விமான பயணிகளில் எவரெல்லாம் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டார்களோ அவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பிறகு எந்தவித கொரோனா குறித்த பரிசோதனையும் இனி செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் விமான பயணிகள் கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இங்கிலாந்தில் இருந்துள்ளது.
மேலும் இவர்கள் இங்கிலாந்திற்குள் நுழைந்த 2 ஆவது நாள் PCR பரிசோதனையையும் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் விமான பயணிகள் இனி மேலே குறிப்பிட்டவாறு எந்தவிதமான கொரோனா குறித்த பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.