சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள், 12 வயதிற்கு குறைவான தங்கள் குழந்தைகளுக்கு off-label தடுப்பூசி செலுத்த வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஸ்விட்சர்லாந்தில் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சிலர், தங்கள் குழந்தைகளை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளர்கள், தற்போது வரை குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியையும் பரிந்துரைக்கவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் இருக்கும் மருத்துவர்கள் 1000-த்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். அதேசமயத்தில், ஜெர்மன் நாட்டிலும் குழந்தைகளுக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான நடைமுறைகளுக்கு, off-label என்ற தொழில்நுட்ப சொல் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, அதிகாரப்பூர்வ அனுமதியின்றி தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என்று அர்த்தமாகும். சுவிட்சர்லாந்தில் 12 வயதுக்கு அதிகமான நபர்கள் அவர்களாகவே முடிவெடுக்கக் கூடிய திறனை பெற்றிருந்தால், பெற்றோர்கள் அனுமதி இல்லாமலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கப்படாமல் குழந்தைகளை அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தினால் பெற்றோர்கள் அவர்களாகவே சொந்த ஆபத்தில் முடிவெடுக்கிறார்கள் என்று சுவிஸ் கன்டோனல் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான Rudolf Hauri எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.