Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்துவிட்டு… கொரோனா என்று நாடகமாடிய தம்பதி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்து விட்டு அவர்கள் கொரோனாவால் உயிரிழந்து விட்டனர் என்று நாடகமாடிய தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி மற்றும் அனுசியாம்மாள் என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். ராமச்சந்திர ரெட்டி மிகவும் கடுமையான உழைப்பாளி. இவர் தனது திருமணமான முதலே கடுமையாக உழைத்து 40 ஏக்கர் நிலம், நிறைய சொத்துகளையும் அவர் சேர்த்து வைத்திருந்தார். தனக்கு வயதாக ஆரம்பித்த பிறகு இரண்டு மகன்களுக்கும் சமமாக அதனை பிரித்துக் கொடுத்து விட்டார்.

வயதான காலத்தில் ஒரு மகனிடம் ஒரு மாதமும், மற்றொரு மகனிடம் மற்றொரு மாதமும் இருந்து கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. இளைய மகன் இறந்த காரணத்தினால் மருமகள் அந்த பொறுப்பை எடுத்து செய்து வந்தார். இதையடுத்து ராமச்சந்திர ரெட்டிக்கு 90 வயதும் அனுசியாமாலுக்கு 80 வயது ஆனதும் பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு மூத்த மகனிடம் வந்தது. பின்னர் அவரை சுமையாக கருதிய மூத்த மகனும் அவரது மனைவியும் அவரை வீட்டில் தங்க வைக்காமல் வீட்டின் அருகில் ஒரு கொட்டகை போட்டு அதை பிளாஸ்டிக் சீட்டுகளில் மூடி அதில் அவர்களை தங்க வைத்தனர்.

அதிக வெப்பம் காரணமாக அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பிறகு பட்டினி போட திட்டமிட்டனர். உணவு தண்ணீர் எதுவும் இல்லாமல் அந்த வயதான தம்பதிகள் இறந்துவிட்டனர். இவர்கள் கொரோனா காரணமாக தான் இறந்தார்கள் என்று கூறி அடக்கம் செய்துவிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர் புதைக்கப்பட்ட சடலங்களை மீட்டு எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அவர்கள் பட்டினியின் காரணமாக தான் உயிரிழந்தார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து மகன் மற்றும் மகளை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |