Categories
விளையாட்டு

பாராலிம்பிக் : இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் …. அவனி லெகாரா அசத்தல் வெற்றி ….!!!

டோக்கியோ பாராலிம்பிக்கில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார் .

16-வது டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 445.9  புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் . இதற்கு முன்னதாக தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில், தற்போது அவர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

Categories

Tech |