டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிட்டண் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கபதக்கம் வென்றுள்ளார் .
16 -வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கபதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த மான் கையை எதிர் கொண்ட கிருஷ்ணா நாகர் , 7-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் .இந்த வெற்றியின் மூலமாக பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 5 தங்க பதக்கம் ,8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது.