சித்தமருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் சித்த மருந்துகளான ஆயுஸ் 64 மற்றும் கபசுர குடிநீரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சித்த மருத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 12 சித்த மருத்துவ மையங்கள் அமைக்கபட்ட நிலையில் கூடிய விரைவில் அது 33 சித்த மருத்துவ மையங்களாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.