Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். இந்த அணிவகுப்பிற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரியா தலைமை தாங்கியுள்ளார்.

அணிவகுப்பில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, அமுதாராணி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அணிவகுப்பிற்கு துணை ராணுவ படையினர் 27 பேர், உத்திர பிரதேசத்தில் இருந்து வந்துள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத் குமார் தலைமையில் கொள்ளிடம் பகுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து 27 துணை ராணுவ படையினரும், காவல்துறையினரும் அணிவகுப்பை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |