Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக… நாளை மின்சார தடை… அதிகாரிகளின் தகவல்…!!

திருமானூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் மின்வாரியம்  அமைந்துள்ளது. இந்த மின்வாரியத்திலிருந்து திருமானுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் மின்னழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் முடிகொண்டான், திருமானூர், மஞ்சமேடு, திருவெங்கானூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று மின் வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |