இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் ஈட்டி எறிதல் தடகள போட்டியின் பாரா பிரிவில் சுமித் ஆண்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மூன்றாவது இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப்போட்டிகள் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த சுமித் ஆண்டில் பாரா ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் ஆண்டில் 66.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக தேசிய சாதனையை படைத்துள்ளார்.
தற்போது ஹரியானாவில் உள்ள போட்டியில் கலந்துகொண்ட சுமித் ஆண்டில் 66.46 மீட்டர் தூரம் என்ற வித்தியாசத்தில் புதிய தேசிய சாதனை படைத்து தங்கப் பதக்கத்தையும் தனதாக்கினார். தனது சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் மூலம் டோக்கியோவில் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்.இது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது .