பப்பாளி இலை சாற்றில் இவ்வளவு நன்மைகளா ?
1. பப்பாளி சாறு எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது. அற்புதமான நன்மைகளை கொண்ட சாறுகளில் ஒன்றாகும்.
2. குறிப்பாக டெங்கு போன்ற கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பப்பாளி சாறு பயன்படுகிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பப்பாளி சாறு குடிக்கவேண்டும்.
3. தமிழ்நாட்டில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை முறை வைத்தியம் தெரிந்து வைத்திருப்பது உதவியாக இருக்கும்.
4. டெங்கு சிகிச்சைக்கு இரண்டு பிரபலமான முறைகள் உள்ளன. மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்க பட்டுள்ளது.
5. ஒன்று நிலவேம்பு நீரை பயன்படுத்துவது. இது ஒன்பது வெவ்வேறு மூலிகைகளின் கலவையாகும். நிலவேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலட்டா) உடன் முக்கிய பொருளாக பப்பாளி இலை சாரும் பயன்படுத்த படுகிறது.
6. 25 மில்லி பப்பாளி இலை சாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு குடித்துவந்தால், பிளேட்லெட் எண்ணிக்கை,வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
7. ஒரு நபருக்கு டெங்கு வரும் பொது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். தங்களை நன்றாக ஹைட்ரேட் செய்துகொள்ள நிலவேம்பு குடிநீர் அல்லது பப்பாளி இலை சாறு எடுத்து கொள்வது மிகவும் நல்லது.