‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்த எஸ்தரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பாபநாசம்’. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ் ,எஸ்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் , மீனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இந்நிலையில் பாபநாசம் படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை எஸ்தர் சேலையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் பாபநாசம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது? என ஆச்சரியமடைந்ததுடன் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் .