நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே நல்லாடை என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ள நாராயணசாமி என்பவர் தலைமறைவாகியுள்ளார். கல்வி களப்பணி என்ற பெயரில் மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற அவர் பாலியல் செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக வெளியே கூறினால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் வீடுகளுக்கு சென்றதும் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் கொடுத்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் ஆசிரியர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆசிரியர் நாராயணசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.