Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் மகனுக்கு கொரோனா… தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ட்விட்..!!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகனான பங்கஜ் சிங், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மத்திய மாநில அமைச்சர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வகையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனும், கெளதம் புத்தா நகர் எம்எல்ஏ-வுமான பங்கஜ் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று அறிகுறி தென்பட்ட நிலையில், அதற்கான பரிசோனையை மேற்கொண்டார்  பங்கஜ் சிங்.. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.. இதனை பங்கஜ் சிங், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
அதில், “கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தவுடன் நான் சோதனை செய்து முடித்தேன், அறிக்கை நேர்மறையாக வந்தது.. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்..
அண்மையில் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பங்கஜ் சிங், தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என்பதும், முன்னதாக அம்மாநிலத்தில் பாஜக தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |