Categories
தேசிய செய்திகள்

ALERT: பனியால் மூழ்கும் நகரங்கள்?…. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சென்ற சில மாதங்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.,23) அதிகாலை டெல்லியில் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலவியது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பல்வேறு சாலைகளில் பனி சூழ்ந்து காணப்பட்டது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனி வரக்கூடிய சில நாட்களுக்கு டெல்லி, வடஇந்தியா பகுதிகளில் பனிமூட்டமானது நீடிக்கும். அத்துடன் பனியால் நகரங்கள் மூழ்க இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் அடுத்த 2 தினங்களுக்கு அடர்த்தியான மூடுபனியை காணக்கூடும். அதே சமயத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் போன்ற நகரங்களில் வெப்பநிலை 1- 2 டிகிரிக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் சாலைகளில் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்கிறது.

Categories

Tech |