Categories
மாநில செய்திகள்

பணி வரைமுறை, பதவி உயர்வு வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை…!!

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகை மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்சிஎஸ்டி ஊழியர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் எஸ்சிஎஸ்டி ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி வரைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பத்து ஆண்டிற்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும். வங்கிகளுக்கு இணையான ஊதியம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சரசுராம் ரவி தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகை மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |