பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடரில் உள்ளே கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனால் முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆரம்பத்தில் விமர்சனங்கள் சந்தித்து வந்த காவியம் அதன் பிறகு ரசிகர்களால் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் திடீரென காவியா பாண்டியன் ஸ்டோர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அவருக்கு பதிலாக தற்போது சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்து வந்த லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார். மேலும் தற்போது காவியா அறிவுமணி தொடரில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிறது. அதாவது, அவர் விரைவில் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.