Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில்… நடிகை சித்ராவுக்கு அஞ்சலி… கதறி அழுத குமரன்..!!

மறைந்த நடிகை சித்ராவிற்கு பாண்டியன் ஸ்டோர் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் தொழிலதிபருடன் திருமணம் செய்து கொள்ள இருந்த சித்ரா, பெற்றோர் சம்மதத்துடன் இவரை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு மாதத்தில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் படபிடிப்பில் நடிகை சித்ராவிற்கு படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர் .நடிகர் ஸ்டாலின், குமரன், சரவணன், ஹேமா, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் குமரன், ஸ்டாலின் ஆகியோர் கதறி அழுத முகத்துடன் உள்ளது தெரிகிறது. முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடந்து வந்த சித்ரா இல்லாமல் படக்குழுவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |