நடிகை சித்ரா மக்கள் தொலைக்காட்சியில் விஜே வாக தனது கேரியரை தொடங்கினார். இதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சின்ன பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், டார்லிங் டார்லிங், வேலுநாச்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதில் பாண்டியன் ஸ்டார் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஹேமந்த் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இவர் நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இயக்குனர் சிவசேகர் சித்ராவை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”இன்று முல்லை பிறந்தநாள். ஆம்.. நான் இயக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் பிறந்தநாள்.
ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தின் பிறந்தநாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது திரையுலகில் புதுமை! கதையில் முல்லையாக வாழ்ந்து சிறப்பாக உருவம் கொடுத்த சித்துவுக்கு பெருமை!! ரசிகர்களின் ரசனை மிகவும் அருமை!!! எனது தொடருக்காக சித்துவை முல்லையாக மாற்றிய தருணம் 2018 ஜூன் மாதத்தில் ஒருநாள்….அன்றைய தினம் முல்லைக்கு, திருமணத்துக்கு முன்பு … திருமணத்துக்கு பின்பு என இருவிதமாக ஒப்பனை செய்து, எடுக்கப்பட்ட புகைப்படங்களை முல்லையின் நினைவுகளோடு தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
சித்து எனக்கு அறிமுகமானதும் அன்றைய தினமே…. இந்நாளில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்…. முல்லைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/ClZO__Hywh8/