Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…. நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட்….!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.

இதேபோல் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இந்த கெட்டப் உங்களுக்கு நன்றாக இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/COVGvH1rocc/?igshid=12xl8dpygh083

Categories

Tech |