பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த லட்சுமி அம்மா பிரபல நடிகையின் தாயார் என்று தெரியவந்துள்ளது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நிகழ்ந்த லட்சுமி அம்மாவின் உயிரிழப்பு இச்சீரியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலா பேட்டி ஒன்றின்போது ஹிட் சீரியலில் இருந்து வெளியேறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பலரும் அறிந்திராத தகவல் ஒன்று வெளியகியுள்ளது. அது என்னவென்றால், நடிகை ஷீலா பிரபல நடிகரான விக்ராந்தின் தயார் என்றும் நடிகர் விஜய்யின் சித்தி என்றும் தெரியவந்துள்ளது.