பஞ்சாப் மாநிலத்தில் டிச..15 இன்று முதல் ஜன்..15 வரை 1 மாதத்துக்கு விவசாயிகளுக்கு அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக்க கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது என மாநில பொதுச் செயலாளரான சர்வான்சிங் பாந்தர் தெரிவித்து உள்ளார். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) பிரச்சனைகளில் மத்திய-மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய சர்வான்சிங் பந்தேர், இன்று முதல் ஜனவரி 15 வரை சுங்கச்சாவடிகளை இலவசமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை டோல் பிளாசாக்கள் இலவசமாக்கப்படும். மேலும் ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியம் அந்த காலகட்டத்தில் வழங்கப்படுவதையும் அமைப்பு உறுதிசெய்யும் என்று அவர் கூறினார். இதற்கிடையில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அரசு அலுவலகங்களுக்கு வெளியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியது. எனினும் அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியமாக புறக்கணிக்கிறது.
இதன் காரணமாக அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்களின் வீடுகளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்பாக ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, தலைவர்களின் உருவ பொம்மையை எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கத்தது.