Categories
உலக செய்திகள்

இதெல்லாம் கொடுத்தா தான் இவங்கள காப்பாற்ற முடியும்…. கடுமையாக பாதிக்கப்பட்ட 33,000 குழந்தைகள்…. முக்கிய தகவலை வெளியிட்ட ஐ.நா அதிகாரி….!!

உள்நாட்டு மோதலால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எத்தியோப்பிய அரசாங்கத்திற்கும், அந்நாட்டிலுள்ள டைக்ரே என்னும் பகுதியில் வாழும் மக்கள் விடுதலை முன்னணிக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து கடந்த மாதம் டைக்ரேவில் தாக்குதலை நடத்திய கிளர்ச்சியாளர்கள் மீகேலை என்னும் பகுதியை கைப்பற்றியுள்ளார்கள்.

இதனால் ஏற்பட்ட உள்நாட்டு மோதலின் காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி 4 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

மேலும் மிகவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் சுமார் 33 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து மருந்து, ஊட்டச்சத்து பொருட்கள், உணவு போன்றவை கொடுக்கப்பட்டால் மட்டுமே இவர்களைக் காப்பாற்ற முடியும் என்று ஐ.நாவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |