பழைய இரும்பு பொருட்கள் கடையில் ரூ. 10 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் காவல்நிலையத்திற்கு அருகே பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் முருகனின் கடைக்கு வந்த மர்ம நபர் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து பணம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த முருகன் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.