Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி… பல லட்சக்கணக்கில் மோசடி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கருமலைக்கூடல் பகுதியில் உதவித்தொடக்ககல்வி ஆசிரியராக இருந்த செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது வங்கிக் கணக்கிற்கு புதிய ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்குப்படிவ புத்தகம் வந்துள்ளதாகவும் செல்லம்மாள் இடம் கூறியுள்ளார். அதன்பின் அந்த நபர் இவற்றை வங்கியில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று செல்லம்மாள் இடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் செல்லம்மாவின் உபயோகத்தில் இருக்கும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்னையும் மற்ற விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார். அதன்பின் சிறிது நேரத்திலேயே செல்லம்மாவின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய் பணப்பரிமாற்றம் ஆகியிருப்பதாக அவரின் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லம்மாள் உடனடியாக வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் பணம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் சேலம் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் செல்லம்மாள் பணம் மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் மோசடி செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |