Categories
சினிமா தமிழ் சினிமா

பணக்கஷ்டத்தால் 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடு மாற்றம்….. ஒரு பொம்மை கூட வாங்க வழியில்ல….. மனதை உருக்கும் ராஷ்மிகாவின் பேட்டி….!!!!!

தென்னிந்திய திரையுலகில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா கர்நாடகாவில் நிறைய சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் அனுபவித்த பண கஷ்டங்கள் குறித்து உருக்கமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில், என் சிறுவயதில் பெற்றோர் பணம் நெருக்கடியில் மிகவும் கஷ்டப்பட்டனர். அப்போது அவர்கள் கையில் பணம் இருக்காது. இதனால் குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டது. வீட்டு வாடகை கொடுக்கவும் பணமின்றி சிரமப்பட்டு இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடு மாறும் அளவிற்கு நிலைமை இருந்தது. மேலும் பெற்றோரால் எனக்கு ஒரு பொம்மை கூட வாங்கி தர இயலவில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Categories

Tech |