Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து 3-வது இடத்தில் சமையல் எண்ணெய் இடம் பெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கடந்த ஓராண்டு காலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதன் மீதான வரி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உள்நாட்டில் எண்ணெய் வகைகளில் விலையை குறைக்கும் விதமாக இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளில் இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 17.5 சதவீதம் இருந்து 5 சதவீதம் குறைத்து தற்போது 12.5 சதவீதமாக மாற்றியுள்ளது.

இந்த வரி குறைப்பு அறிவிப்பு வருகிற 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 32.5 சதவீதத்தில் இருந்தது. இதை 15 சதவீதம் குறைத்து 17.5 சதவீதத்தில் குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சமையல் எண்ணெய் விலை 4 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை குறைவாக விற்கப்பட்டது. இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக இருப்பதால் சமையல் எண்ணெய் விலை மீண்டும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |