Categories
உலக செய்திகள்

‘தடுப்பூசி அவசியம் செலுத்த வேண்டும்’…. பாலூட்டும் தாய்மார்கள்…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா ஆராய்ச்சியாளர்….!!

பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா நாட்டில் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடை பெற்றது. இந்த ஆய்விற்காக 21 கொரோனா தோற்று பாதிக்கப்படாத பாலூட்டும் தாய்மார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பாக மூன்று முறை தாய்ப்பால் மற்றும் அவரது ரத்த மாதிரிகளை அளித்துள்ளனர். மேலும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளை செலுத்திய பின்னரும் அவர்களின் தாய்ப்பால், இரத்த மாதிரிகளை வழங்கியுள்ளனர்.

அவற்றை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் “BREAST FEEDING MEDICINE” என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியானது தாய்மார்களையும் குழந்தைகளையும் பேணிகாக்கும் என்பதால் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கட்டாயமாக தடுப்பூசி போடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “தாய்ப்பாலில் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் அளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதை ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளோம். ஆகவே தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்” என கூறியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் பிறக்கும் பொழுதே நோய் எதிர்ப்பு சக்தியானது வளர்ச்சியடையாது. அவர்கள் நோய் தொற்றுக்கு எதிராக  சொந்தமாக போராட வேண்டும்.

Categories

Tech |