பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலக பகுதிகளில் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்கின்ற வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதை உதவி கலெக்டர் சிவதாஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் பள்ளி வாகனங்களின் அனுமதிச்சீட்டு, இன்சுரன்ஸ், வரி சான்று, வேக கட்டுப்பாடு கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவிப் பெட்டி, அவசர வழி, புகை சான்று என அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு முன்பாகவே பள்ளி ஓட்டுநர்கள் இடையே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பேசும் போது, வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறிய குறைபாடு இருந்தாலும் அதை உடனே சரி செய்து பிறகு தான் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஒரு சிறிய பிரச்சினையும் இருக்கக் கூடாது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பாக வந்து செல்வது ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.