தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்குவதற்காக 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் மதிப்பீட்டுத் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடந்து முடிந்தது. அதனை போலவே தொடக்கப்பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் இடைவெளியை போக்குவதற்காக மத்திய அரசு 3,5,8 மற்றும் 10 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி என்ஏஎஸ் திறனறி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.