பள்ளிகளுக்கு நேரில் சென்று கலெக்டர் மாணவர்களுக்கு படம் வரைந்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்த நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர் வாசலில் நின்று இனிப்பு வழங்கியும் மற்றும் ரோஜா பூ கொடுத்தும் வரவேற்றுள்ளனர்.
பின்னர் இம்மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். அதற்குப் பிறகு வகுப்பறைக்கு சென்று அவர் விலங்குகளின் படங்களை கரும் பலகையில் வரைந்து அதன் பாகங்கள் குறித்து பாடம் நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் இம்மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மேலும் பள்ளிகளில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.