பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பள்ளம் தோண்டி கொண்டிருக்கும்போது முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் இருக்கின்றது. எனவே இது மிக பழமைவாய்ந்தால் கட்டிடங்களை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிதாக மாரியம்மன், விநாயகர், முருகன் மற்றும் சிவன் கோவில் கட்டுவதற்க்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கோவில் கட்டுவதற்கான இடத்தில் பொக்லைன் எந்திரத்தின மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடியில் முருகனின் கற்சிலை இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கோவிலின் தர்மகர்த்தா சத்தியநாதன், பூசாரி மணி போன்றோர் அந்த சிலையை வெளியே எடுத்து கோவில் இடத்தில் வைத்தனர். இதனை அறிந்து வந்த பொதுமக்கள் முருகன் சிலைக்கு கற்பூரம் ஏற்றியும் மாலை அணிவித்தும் வழிபட்டனர்.