கோழி தீவனத்தின் விலையை குறைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்து மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் தினமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வின் காரணமாக கோழித் தீவனத்தின் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்து பழைய நிலைக்குத் தமிழகம் திரும்பும் இந்த சூழ்நிலையில் திடீரென பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணத்தினால் மக்காச்சோளம் கிலோ 24 ரூபாயாகவும், சோயா கிலோ 25 ரூபாயாகவும், தாவர எண்ணெய் லிட்டர் 110 ரூபாயாகவும் கோழி தீவனம் 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனை அடுத்து கோழி பண்ணையாளர்கள் கூறும் போது தமிழகத்தில் கோழித் தீவனத்திற்கான மூலப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், வெளிநாட்டிலிருந்து சோயா இறக்குமதியின் வரியை குறைக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.