Categories
தேசிய செய்திகள்

பழிக்கு பழியா?…. குரங்குகள் மற்றும் நாய்க்குட்டிகள் இடையில் கடும் யுத்தம்…. ஒரு சுவாரசியமான சம்பவம்….!!!!

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பீட் எனும் இடத்தில் நாய்க்குட்டிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தில் 80 நாய்க்குட்டிகளை கடித்துக் குதறி கொன்ற 2 குரங்குகளை வனத்துறையினர் வலைவீசி பிடித்தனர். இதனிடையில் நாய் குட்டிகளை தூக்கிக் கொண்டு உயரமான கூரைகளில் தாவும் குரங்குகள் அங்கு இருந்து அவற்றை தள்ளிவிட்டு கொல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

அதன்பின் நாய்களுடன் யுத்தம் நடத்தும் குரங்குகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் வெறித்தனமான 2 குரங்குகள் அடையாளம் காணப்பட்டு அவை சிறப்பிக்கப்பட்டது. அதாவது குரங்குக்குட்டி ஒன்றை நாய்கள் கடித்து கொன்றதால் பழிக்குப் பழி வாங்க நாய்களின் குட்டிகளை குரங்குகள் கொன்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |