பல்லி விழும் பலன்கள் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பல்லி நம் உடலில் எந்தெந்த பகுதிகளில் விழுந்தால் என்னென்ன பிரச்சனைகள், நன்மைகள் நடக்கப்போகிறது, அப்படி விழுந்து விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது பல்லி ஒரு சில செய்திகளை நம்மிடம் சொல்வதற்காக அடிக்கும் என்று சொல்லுவார்கள். அது தேவர்களுக்கும், தேவலோகத்தில் உள்ள விஷயங்களை கூட சொல்லும். அதாவது தெய்வத்திற்கும் அந்த பல்லிக்கும் தொடர்பு உண்டு.
நம் முன்னோர்கள் கூட பல்லி வடிவில் நமக்கு நன்மைகள் சொல்லுவார்கள் என பல சாஸ்திரங்கள் கூறுகிறது. கவுளி சாஸ்திரம் என்று ஒரு சாஸ்திரம் இருக்கிறது. பல்லி விழும் பலன்கள், பல்லி எந்த திசையிலிருந்து அடித்தால் என்னென்ன பலன்கள் என்று இருக்கும.
பல்லி விழும் நன்மைகள்:
*பல்லி ஒருத்தருடைய தலையில் விழுந்தால் அவருக்கு லாபம் ஏற்படும்.
*நெற்றியில் விழுந்தால் நம்முடைய காதலியை சந்திக்க போகிறோம் தற்செயலா அந்த விஷயம் நடக்கும்.
*இரண்டு புருவங்களுக்கு இடையில் விழுந்தால் பெரிய அரசாங்க அதிகாரிகள் கூட உங்களுக்கு உறவு மேம்படும்.
*கழுத்துப்பகுதியில் பல்லி விழுந்தால் உங்களுடைய எதிரிகள் அழிய போகிறார்கள்.
*இடது காதில் விழுவது நன்மையை பயக்கும்
*அதே சமயம் வலது காதில் பல்லி விழுந்தால் உங்களுடைய வயதை கூட்டும்.
*கண் பகுதியில் விழுந்தால் சிறுவீட்டின் வளர்ச்சி மேம்படும்.
*வயிற்றுப் பகுதியில் விழுந்தால் உங்கள் வீட்டில் ஆபரணங்கள் நகைகள் வாங்க போறீங்க அதற்கான விஷயங்கள் கிடைக்கும்.
*தொடைப்பகுதியில் விழும் பொழுது உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பெரிய *அதிகாரிகளின் தொடர்பும் கிடைக்கும்.
*கையில் விழுந்தால் நீங்கள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கலாம். அப்படி ஒரு நிலைமை ஏற்படும்.
*தோளில் விழுந்தாள் வெற்றி கிடைக்கும்.
*தொப்புள் பகுதியில் விழுந்தால் செல்வம் சேரும்.
*இடுப்புப்பகுதியில் விழுந்தால் புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
எந்தெந்த இடத்தில் விழுந்தால் என்னென்ன தீங்குகள் விளையும்:
*உதட்டின் மேல் விழுந்தால் பண இழப்பு ஏற்படும்.
*மூக்கில் விழுந்தால் உடல்நலம் பாதிக்கப்படும்.
*இடது கையில் பல்லி விழுந்தால் அரசாங்க வேலைகளிலும் ஒரு சில தடைகள் வந்து ஏற்படும்.
*மார்பில் பல்லி விழுந்து என்றால் உங்களுக்கு வீட்டில் ஒரு துக்கத்தை ஏற்படுத்தும்.
*முதுகில் பல்லி விழுந்தால் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒரு சில பிரச்சனைகள் தடங்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
*வலது மணிக்கட்டில் விழுந்தால் பணம் இழப்பு ஏற்படும்.
*தலைமுடியில் விழுந்தால் அது ஒரு பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது. ஒரு விபத்துகள் ஏற்படலாம், ஒரு மரணம் நிகழும்.
பரிகாரங்கள்:
பள்ளி விழுந்ததும் செய்ய வேண்டியது உங்களுடைய கை, கால், வாய் எல்லாத்தையுமே சரியா கழுவ வேண்டும். அதே போல ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் வைத்துக் கொண்டு அந்தப் பள்ளியோடு உருவத்தை வைத்து காண வேண்டும். அந்த பள்ளியுடன் நிழலை நீங்கள் பார்க்கவேண்டும். அதோட தீய சக்திகளை அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும்.
அது உறிஞ்சி விட்ட பிறகு அந்த எண்ணெய்யை கொண்டு நீங்க வெளியே கொட்ட வேண்டும். அந்த பல்லின் நச்சுத் தன்மைகள் உங்க மேல பட்டு இருப்பது நீங்குவதற்காக. உங்கள் தோள்களின் மேல் பட்டால் கூட துணிகளை துவைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதனால்தான் ஒரு சில வீடுகளில் எண்ணெய் திறந்து வைக்க மாட்டார்கள்.அவ்வாறு திறந்து வைத்தால் அதில் பல்லிகளின் தீய சக்திகள் எல்லாம் அண்டிவிடும்.
அந்த எண்ணெய்யை நாம் உடம்பில் தேய்க்கும் பொழுது நல்லது கிடையாது. அதனால் தான் எண்ணெய் எப்போதுமே மூடி வைக்கவேண்டும். அந்த எண்ணெயை எடுத்து அதன் பிறகு அதை நீங்கள் எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது. அந்த பல்லின் எதிர்மறை சக்திகள் எல்லாமே எண்ணெயில் ஒளிந்து கொள்ளும் இதனால்தான் வீட்டில் எண்ணெய் விஷயங்களை திறந்து வைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.