பாலஸ்தீன மக்கள் ஜெருசலேமில் நடத்திய போராட்டத்தை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற புகைப்பட கலைஞரை காவல்துறையினர் தாக்கிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக Sheik Jarrah என்ற நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர்.
மேலும், அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், அங்கு நடந்த வன்முறையை படம் பிடிக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவரை காவல்துறையினர் தாக்கினர். இதனால், போராட்டம் நடத்தப்பட்ட இடமே வன்முறைக்களமாக மாறியது.